செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (13:41 IST)

தளபதி விஜய்யின் 27 ஆண்டு சினிமா பயணம்! - ட்ரெண்டாகும் #27YrsOKwEmperorVIJAY

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராய் வலம் வரும் விஜய்யின் 27 ஆண்டுகால திரை பயணத்தை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக மாறி தமிழகமெங்கும் தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் விஜய் முதன் முதலில் திரைக்கு வந்தது அவரது அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மூலமாகதான்! தந்தை அறிமுகப்படுத்தி வைத்தாலுன் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்களையும் ஏற்படுத்திக் கொண்டார் விஜய்.

ஆரம்பத்தில் காதல் சார்ந்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடித்து வந்த விஜய்க்கு மாஸ் ஹீரோ பிம்பத்தை ஏற்படுத்தியது திருமலை, சிவகாசி, கில்லி போன்ற ஆக்‌ஷன் படங்கள்தான்!

1992ல் இதே டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்த படம் வெளிவந்து இன்றோடு 27 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. விஜய்யின் திரைப்பயணம் தொடங்கி 27 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த தருணத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #27YrsOKwEmperorVIJAY என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.