1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (12:38 IST)

தளபதி 64 பட "டைட்டில்" இணையத்தில் லீக் ? - பெரும் குழப்பத்தில் படக்குழு!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஆன்ட்ரியா விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையில் படத்தை குறித்த தகவல்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து படக்குழுவினருக்கு பீதியை கிளப்பி வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது படத்தின் தலைப்பு "சம்பவம்" என்று தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும்  இப்படத்தில்  ‘சம்பவம்’ என தொடங்கும் ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த படக்குழுவினர் பெரும் குழப்பத்தை அடைந்தனர். பின்னர், விஜய் படம் பற்றி வரும் தகவல்கள் எல்லாம் வதந்தி அதை நம்பாதீர்கள் என படக்குழு கூறியுள்ளார்கள். பின்னர் தான் தெரியவந்தது " சம்பவம் " என்ற டைட்டிலில்  உருவாகி வரும் படம் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கி வரும் வேறொரு புதிய படமென்று. அதில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன மாஸ்டர் தினேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்களாம். எனவே "சம்பவம்" தளபதி 64 படத்தில் தலைப்பு இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.