வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 14 மே 2018 (13:57 IST)

கீர்த்தி சுரேஷைப் பாராட்டிய விஜய்!

‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்துவிட்டு கீர்த்தி சுரேஷைப் பாராட்டியிருக்கிறார் விஜய்.
 
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.
 
கீர்த்தி சுரேஷ், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீதர் கொரியோகிராபி செய்துள்ளார்.
 
‘நடிகையர் திலகம்’ படத்துக்குக் கிடைத்துவரும் பாராட்டைக் கேள்விப்பட்டு, விஜய்யும் படம் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். அவர் படம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்த விஜய், அச்சு அசல் சாவித்ரி அம்மா போலவே நடித்திருப்பதாகக் கீர்த்தி சுரேஷைப் பாராட்டியுள்ளார். இந்தப் பாராட்டால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.