“மிக்க நன்றி காட்ஃபாதர்” – கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி

act
CM| Last Updated: சனி, 12 மே 2018 (18:41 IST)
‘மிக்க நன்றி காட்ஃபாதர்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது.

படம் பார்த்தவர்கள், கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். இதுவரை அவரை விமர்சித்தவர்கள், கேலி செய்தவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், “மகாநடி குறித்து நல்ல விமர்சனங்கள் வருகின்றன. என்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் கீர்த்திக்கும், துல்கர் சல்மானுக்கும் என்னுடைய வாழ்த்துகள். விரைவில் படம் பார்க்கிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

lal

அதற்குப் பதில் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், “மிக்க நன்றி என்னுடைய காட்ஃபாதர். தயவுசெய்து படம் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :