திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:27 IST)

’’விஜய் 65’’ படத்தில் துப்பாக்கி - 2 ? அல்லது புதிய கதைக்களம் ? – ஏ.ஆர் . முருகதாஸ் பதில்

ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி, துப்பாக்கி, கத்தி உள்பட ஒரு சிலதிரைப்படங்கள் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் இயக்கிய முதல் படமான ‘தீனா’ குறித்த இரண்டாம் பாகம் தகவல்களும் வெளிவந்தன.

மேலும் ’தளபதி 65’ படத்தை இயக்க இருக்கும் ஏஆர் முருகதாஸ், அந்த படத்திற்கு ’துப்பாக்கி 2’ என்று டைட்டில் வைக்க இருப்பதாகவும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம் என்றும் கூறப்பட்டது

ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த ஏஆர் முருகதாஸ் அவர்கள் ’என்னுடைய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா தனக்கு இல்லை என்றும் தன்னுடைய படத்தின் கதை அந்தப் படத்தோடு முடிந்துவிடும் என்றும் கூறினார்.

இந்நிலையில்,  டோக்கியோ தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த மாதிரியாக படம் எடுக்க வேண்டும்  என்பது குறித்து முறைப்படியான அறிவிப்பு வந்தால் தான் அதுகுறித்து யோசிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.