1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:09 IST)

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக சீராக இருந்துவரும் நிலையில் இன்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
சற்று முன் வெளியான அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அவரது உடலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியானது ஆனால் இந்த செய்தியை எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது