செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (10:11 IST)

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – இணையத்தைக் கலக்கும் தகவல் !

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விஜய் 64’ படத்தின் தலைப்பாக டாக்டர் என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிகில் படத்தை அடுத்து விஜய் தனது 64 ஆவது படத்தில் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக விஜய் 64 என பெயர் வைத்து அழைக்கப்பட்டு வருகிறது.  . இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்தப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படம் கமல் நடித்த நம்மவர் படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி உலாவர, மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட படம் என்பதால் ‘டாக்டர்’ என்ற ஒரு டைட்டில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் ’டாக்டர்’ என்ற தலைப்பு மட்டுமல்லாமல் மேலும் சில தலைப்புகளையும் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் அவற்றில் ஒன்று தேர்வு செய்யபப்டும் எனத் தெரிகிறது.