1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (14:59 IST)

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: படக்குழுவினர் அதிர்ச்சி..!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘ஏ’  சான்றிதழ் கொடுத்துள்ளதால் 18 வயது உட்பட்டோe திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க முடியாது 
 
அது மட்டுமின்றி இந்த படத்தை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப அனுமதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.  ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
 
 
Edited by Siva