பழம்பெரும் தயாரிப்பாளர் வெங்கட்ராமா ரெட்டி காலமானார்

Last Modified ஞாயிறு, 12 மே 2019 (15:29 IST)
புரட்சி தலைவர் எம்.ஜிஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை', ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி', கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்', விஷால் நடித்த 'தாமிரபரணி', 'தனுஷ் நடித்த 'படிக்காதவன்', அஜித் நடித்த 'வீரம்', 'விஜய் நடித்த 'பைரவா மற்றும் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் 'சங்கத்தமிழன்' போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரடொக்சன்ஸ்.
 
இந்நிறுவனத்தின் தலைவரான வெங்கடராமா ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75. எம்.ஜி.ஆர் முதல் விஜய்சேதுபதி வரை நான்கு தலைமுறை நடிகர்களை வைத்து படம் எடுத்த நிறுவனத்தின் தலைவர் மறைந்திருப்பது திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
மறைந்த வெங்கட்ராம ரெட்டி அவர்களுக்கு பாரதி ரெட்டி என்ற மனைவியும் ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். வெங்கட்ராம ரெட்டி உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை 7 .30 முதல் 9 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்இதில் மேலும் படிக்கவும் :