திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (12:02 IST)

'துணிவு’ வாரிசு’ ரெண்டுமே ரெட் ஜெயண்ட் தான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

thunivu vs varisu
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் தற்போது வாரிசு படத்தையும் ஒருசில பகுதிகளில் தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் வாரிசு திரைப் படத்தை ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
இது குறித்து அறிவிப்பை வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட ஐந்து பகுதிகள் தவிர மீதமுள்ள பகுதிகளில் தான் மற்ற நிறுவனங்கள் வாரிசு படத்தை ரிலீஸ் செய்கின்றன 
 
எனவே வாரிசு துணிவு ஆகிய இரண்டு படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருப்பதால் தியேட்டர் பிரச்சினைகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு, வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே
 
Edited by Mahendran