எல்லாத்தையும் மனசுல வச்சிதான் படம் பண்ணியிருக்கேன்… ஹெச் வினோத் கொடுத்த துணிவு அப்டேட்!
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
அஜித் ஹெச் வினோத் கூட்டணியின் மூன்றாவது படமாக துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
இந்த படம் பற்றிய தகவல்களை இதுவரை மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் இப்போது ஹெச் வினோத் துணிவு படம் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். படம் பற்றி பேசியுள்ள அவர் “இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை பற்றிய படம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதை மனதில் வைத்துதான் படத்தை எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.