வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (07:44 IST)

வனிதா விஜய்குமார் வீட்டுக்கு மனைவியோடு சென்ற விஜய் – வைரல் ஆகும் புகைப்படம்!

நடிகர் விஜய்குமாரின் மகள்களில் ஒருவரான வனிதா விஜய்குமார் தனது வீட்டுக்கு விஜய் வந்த புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ஆரம்பகால படங்களில் ஒன்றான சந்திரலேகாவில் அவருக்கு ஜோடியாக நடித்தார் வனிதா விஜய்குமார். அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் தனது திருமண சர்ச்சைகள் ஆகியவை மூலமாக எப்போதும் புகழ் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார். இப்போது மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஜய் தனது வீட்டுக்கு மனைவியோடு வந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.