நடுரோட்டில் போலீஸ்காரரை அடித்த நபர்… ரவுண்டு கட்டிய போலீஸார்…வைரல் வீடியோ
சமீபத்தில் அமெரிக்க நாட்டில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின நபரை ஒரு வெள்ளையின போலீஸார் கழுத்து நெறித்துக் கொல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் கண்டனம் தெரிவித்து, ஜார்ஜ்ஜின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் தெருவில் ஒரு நபர் போலீஸ்காரை அடிப்பது போன்றும் அவரைச் சூழ்ந்து கொண்ட மற்ற போலீஸார் இளைஞரை அடிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
ஆனால், போலீஸாரை அடித்தாலும் இந்த நபர் வெள்ளையின நபர் என்பதால் சண்டைபோட்டும் அவரை உயிருடன் விட்டுவிட்டார்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.