வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:42 IST)

ரஷ்யா கிளம்பினார் அஜித்: ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு!

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அஜித் ரஷ்யாவுக்கு கிளம்பி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் விமான நிலையத்தில் லக்கேஜ் உடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் 5 நாட்கள் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட வந்திருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘வலிமை’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் தற்போது திரையரங்குகள் திறந்து விட்டதால் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் ரஷியாவிலிருந்து சென்னை திரும்பியதும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான புது போஸ்டர் ஒன்றியம் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் அனேகமாக ஆயுதபூஜை தளத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது