திரையரங்குகள் திறக்கும் அறிவிப்பு: ஓரிரு நாட்களில் ‘வலிமை’ ரிலீஸ் தேதி!
ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பல திரைப்படங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் சிறிய படங்கள் அதிக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விரைவில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ரிலீஸ் செய்து உடன் கூடிய போஸ்டர் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் நாடு திரும்பியதும் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது