புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (18:58 IST)

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதும் தமிழ்ப்படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தீபாவளிக்கு முன்பும் பின்பும் மற்ற படங்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தீபாவளி அன்று ‘அண்ணாத்த’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தீபாவளி தினத்தில் பப்ஜி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, அர்ஜுமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மேலும் மைம்கோபி, மொட்ட ராஜேந்திரன், நிகில் முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தன்று பப்ஜி திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்