திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:58 IST)

தமிழர்களின் இந்திய அடையாளம் அழிவுற்றதே! டுவிட்டரில் வைரமுத்து உருக்கம்

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். நீதிபதி லட்சுமணன் அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியை அறிந்ததும் நீதித்துறையினர் மட்டுமின்றி தமிழகமே சோகத்தில் மூழ்கியது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மனைவி மீனாட்சி ஆச்சி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உயிரிழந்த நிலையில் இன்று அவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் மறைவு குறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அவர் உருக்கமாக எழுதிய கவிதையில் கூறியிருப்பதாவது
 
நீதியரசர் 
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!
 
நீதிமன்றத்தின் 
நெடுந்தூண் சாய்ந்ததே!
 
தமிழர்களின் 
இந்திய அடையாளம் அழிவுற்றதே!
 
கலைஞர் வெளியிடக் 
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!
 
இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!
 
அனைவர்க்கும் 
என் அழுகை இரங்கல்