1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:14 IST)

அதள பாதாளத்தில் வீழ்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்! – 19 ஆயிரம் வேலையிழப்புகள்!

கொரோனாவால் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 19 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பெரும் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வருகின்றன. முக்கியமாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளதால் உலகம் முழுவதும் விமான சேவை நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

கொரோனா பாதிப்பிற்கு முன்னதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 1,40,000 பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அமெரிக்காவில் பெரும் விமான சேவையான அமெரிக்கன் ஏர்லைனஸ் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகமான விமான சேவைகளை வழங்கு வந்தது.

தற்போது கொரோனாவால் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது. முன்னதால அமெரிக்க அரசு விமான நிறுவனங்களுக்கு கொரோனா இழப்பீடாக 25 பில்லியன் அளித்திருந்தாலும், அது விமான நிறுவனங்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது பணியாளர்களில் 19 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.