உலக நாயகன் போஸ்டரில் வைகை புயல்! – ட்ரெண்டாகும் நேசமணி போஸ்டர்!
சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் பட போஸ்டர் பாணியில் வடிவேலுவுக்கு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அதே போஸ்டரை வடிவேலு வெர்சனாக தயாரித்துள்ளனர் ரசிகர்கள் சிலர். சில ஆண்டுகளுக்கு முன்னர் காண்ட்ராக்டர் நேசமணி காமெடி ரசிகர் ஒருவர் கமெண்டால் பெரிய அளவில் ட்ரெண்டானது. அதை மையப்படுத்தி “நேசமணி” என்ற போஸ்டரை ரசிகர்கள் தயார் செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.