ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (09:26 IST)

ஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ஒலிம்பிக் பாடல்! – மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள இந்துஸ்தானி வே என்ற பாடல் வைரலாகியுள்ளது.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர். 

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “ஹிந்துஸ்தானி வே” என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெளியான இந்த பாடல் ட்ரெண்டாகி உள்ள நிலையில், இந்திய வீரர்களை உற்சாகபடுத்தும் விதமாக உள்ள இந்த பாடலுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட பலர் ஏ.ரஹ்மானை பாராட்டியுள்ளனர்.