1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (11:12 IST)

சிநேகனை வெறுக்கும் காஜல்; ரகசியத்தை உடைக்கப்போவதாக தகவல்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதுவரவாக நடிகை காஜல் பசுபதி நுழைந்தார். வீட்டில் நுழைந்தவுடன் பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். காயத்ரியை பார்த்து நானும் உங்களை மாதிரி தான், மனசுல பட்டதை முகத்துக்கு நேரா பேசிடுவேன் என்று கூறினார்.

 
பிந்துவை பார்த்து "எல்லாம் தெரிஞ்சும் இத்தனை நாள் சும்மாவே இருக்கிறாயே, எதாவது செய்” என்று நக்கல் அடித்தார். குறிப்பாக ஆரவிடம் ஓவியா விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என்று பல கேள்விகளை சராமரியாக எழுப்பினார். பிக்பாஸ் வீட்டில் ஜெயிப்பதற்கான வழியை ஹரிஸ் கல்யாணுக்கு கூறினார்.
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது கவிஞர் சினேகன்தான் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். அவரை வெளியேற்ற பலர் முயன்றாலும் இன்னும் அது முடியவில்லை. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய காஜல், தற்போது  சினேகன் பற்றி ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
 
சிநேகனை மக்களுக்கு பிடித்தாலும் நான் அவரை வெறுக்கிறேன். அதற்கான ஒரு முக்கிய ரகசியத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி  முடிந்தபிறகு 30ம் தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.