1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:44 IST)

பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.  இவர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய நற்பணி மன்றங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறார்.

இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பதில் புயல் பாதித்த மக்களுக்கு உதவிகளை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.  அவருக்கு பல்வேறு நடிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.