1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (20:15 IST)

துருவ் விக்ரம் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்!

இயக்குனர் மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம்   இணையும் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ள நிலையில், இதற்காக அவர் கபடி பயிற்சி எடுத்து வந்தார். 

இப்படம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,  மார்ச் 15 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும், இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்  இப்படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மாரி செல்வராஜ்-துருவ் இணையும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

அதன்படி, அனுபமா பரமேஸ்வரன் மற்று தர்ஸனா ராஜேந்திரன் ஆகிய இரண்டு பேர்  நடிக்கவுள்ளனர்.
 
இதில், மலையாளத்தில் வெளியாகி ஜேஜே ஜெயஜெயஜெய ஜெயஹே என்ற படத்தில் மூலம் நடிகர்களின் கவனத்தைப் பெற்றவர் தர்ஸனா ராஜேந்திரன் ஆவார்.
 
இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.