1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (21:03 IST)

இளையராஜா பயோபிக் படத்தில் இயக்குநர் மாற்றம்!

தன் வாழ்க்கை வரலாறு படத்தினை இளையராஜாவே தயாரிக்கவுள்ளதால், இயக்குனரையும் அவரே தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் புகழ்பெற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் பஞ்சு அருணாச்சலத்தால் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு  இசையமைத்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா.
 
இளையராஜா தன் இசையமைப்பு, அவரின் அனுபவம்  பற்றி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவரது பயோபிக் படம் உருவாக வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
 
அதன்படி இளையராஜாவின் பயோபிக் படத்தை  இயக்குனர் பால்கி இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை இளையராஜாவே தயாரிக்கவுள்ளதால், இயக்குனரையும் அவரே தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதற்கிடையே, இளையராஜாவிடம், நடிகர் தனுஷ், அருண்மாதேஸ்வரன் மற்றும் மாரிசெல்வராஜ் இருவரையும் அனுப்பியதாகவும் அவர்கள் இருவரிடமும் இளையராஜா பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
விரைவில் இதுபற்றி  அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.