Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ள பிக்பாஸ் போட்டியாளர்

Sasikala| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (13:52 IST)
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் சல்மான் கான். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 12 சாதாரண ஆட்களும், 6 சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜுபைர் கான் கெட்ட வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் கோபமான சல்மான் கான்,  ஜுபைர்  கானை லெஃப்ட்&ரைட் வாங்கிவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜுபைர் கான், பலபேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சல்மான் தன்னை திட்டியதை தாங்க முடியாமல் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.
 
இதனால் தற்கொலைக்கு முயன்ற ஜுபைரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜுபைர் வெளியேற்றப்படுவதாகவும் அறிவித்துள்ளார் சல்மான் கான்.
 
இந்நிலையில் ஜுபைர் மும்பை போலீஸிடம் பிக்பாஸ் வீட்டில் தன்னை திட்டி மிரட்டியதாக சல்மான் கான் மீது புகார்  அளித்துள்ளார் ஜுபைர். இதனால் இந்தியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :