1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (15:44 IST)

’கமல் 234’ படத்தில் த்ரிஷா.. மாஸ் புகைப்படம் ரிலீஸ்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 ஆவது படம் குறித்த அறிவிப்புகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் துல்கர்சல்மான் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி த்ரிஷா என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக கமலுடன் இணைய உள்ளார். 
 
அதேபோல் பொன்னின் செல்வன் இரண்டு பாகங்களில் மணிரத்னத்துடன் இணைந்த த்ரிஷா மூன்றாவது முறையாக இணைய உள்ளார். 
 
கமல், மணிரத்னம், துல்கர் சல்மான், த்ரிஷா ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
 
Edited by Siva