1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (11:38 IST)

நடிப்பில் சாதிக்க எதுவும் இல்லை, அரசியல் களம் காத்திருக்கிறது: கமலுக்கு சிவகுமார் வாழ்த்து..!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ள நடிகர் சிவகுமார்  நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை, அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
நடிகர் சிவகுமார் கமல்ஹாசனுக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் ’நடிப்பு கலையில் அசகாய சூரர்கள் என்று நாம் மதித்து போற்றுபவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான். அவர்கள் செய்த வெரைட்டி ரோல்களை இதுவரை வேறு யாராலும் செய்ய முடியவில்லை. 
 
எட்டு படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம். வில்லன் வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் ஹீரோ நீங்கள்தான். நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் திரையில் சாதித்ததை அரசியலிலும் சாதிக்க முடியும் என்று துணிந்து இறங்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran