விராட் கோலியை யாரென்று கேட்டு ஓவர் நைட்டில் ஓபாமாவான பாகிஸ்தான் பெண்


Abimukatheesh| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:12 IST)
விராட் கோலியை யாரென்று கேட்ட பாகிஸ்தான் பெண் ஒரே நாளில் டுவிட்டரில் பிரபலமாகிவிட்டார்.

 

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆசிரியர் தினத்தையொட்டி டுவிட்டரில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் எப்படி இருக்க வேண்டும் என காட்டியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் பல பிரபல கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 
 
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை பாராட்டியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் யார் இந்த ஜெண்டில்மேன் என விராட் கோலியை பார்த்து கேட்டுள்ளார்.
 
அதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் விராட் கோலி யாரென்றும், அவர் பதிவிட்ட புகைப்படத்தில் பெயர்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். விராட் கோலியை யாரென்று கேட்டதால் அந்த பெண் ஒரே நாளில் டுவிட்டரில் பிரபலமாகிவிட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :