ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (14:53 IST)

துணிவு டிரைலரின் டைம்லைனை வெளியிட்ட எடிட்டர் விஜய் வேலுக்குட்டி!

அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இதையடுத்து வெகுமக்களின் பெரிய பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த டிரைலர் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 4.4 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் சாதனைகள் படைத்து வரும் துணிவு படத்தின் டிரைலரின் எடிட்டிங் டைம்லைன் புகைப்படத்தை படத்தின் படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி வெளியிட்டுள்ளார்.