திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:21 IST)

தளபதி விஜய்யின் 'வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

varisu
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் குழுவினர் 'வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த ட்ரெய்லர் சன் டிவி பக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 'வாரிசு’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை வெளியாகும் டிரைலரில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran