1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (18:05 IST)

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - ட்ரெய்லர்

அறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


 

 
கயல் படம் மூலம் அறிமுகமான சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுதர் இயக்கியுள்ளார். இரா பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சுதர் தற்போது தனது முதல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.எஸ்.ரகுநாதன் மற்றும் பிரபு வெங்கடாச்சலம் தயாரித்துள்ளனர்.