ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (13:05 IST)

இந்த வார பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.. கசிந்த தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களின் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன்  செய்யப்படுவார் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுபவர் அக்ஷயா ஐஷு என்று தெரியவந்துள்ளது. கடந்த வாரம் அர்ச்சனா, பிராவோ, தினேஷ், விசித்ரா  ஐஷு, பூர்ணிமா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவரான ஐஷு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன், பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து காரசாரமாக போட்டியாளர்களிடம் விவாதித்தார் என்பதும் நேற்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருந்த நிலையில் இன்றும் அதே விறுவிறுப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva