1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 நவம்பர் 2023 (08:18 IST)

பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் நான் வரணுமா? இரண்டு கண்டிஷன் போடும் ப்ரதீப்!

விஜய் டிவியில் பிக்பாஸ் தொடரின் 7வது சீசன் பரபரப்பாக சென்று வருகிறது. இதில் கடந்த வாரத்தில் ப்ரதீப்பை ஆபத்தான நபர், பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறி ஹவுஸ்மேட்ஸ் ரெட் கார்டு காட்டியதால் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிர்வாகம் வெளியேற்றியது.

இது ப்ரதீப்புக்கு நடந்த அநீதி என திரைப்பிரபலங்கள் பலரும், ப்ரதீப் ரசிகர்களுமே கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் நடந்த ஒரு டாஸ்க்கில் நிக்சன் சக போட்டியாளரான வினுஷாவின் உடலமைப்பு குறித்து வர்ணித்து பேசியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மாயா, ஐஷூ போன்றோரும் ப்ராவோ குறித்து ஆபாசமாக அவர் பார்ப்பதாக பேசியிருந்தனர்.

இந்நிலையில் ப்ரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைக்கப்பட உள்ளார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து ப்ரதீப் பதிவிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர வேண்டுமென்றால் எனக்கு இரண்டு ரெட் கார்ட்கள் கொடுக்கப்படவேண்டும். எனக்கு எதிராக சதி செய்தவர்களை நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவேன். மேலும் எனக்கு ஏழாவது வாரத்தின் கேப்டன் பதவி கொடுக்கப்படவேண்டும்” என கண்டீஷன்களை போட்டுள்ளார்.