1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:31 IST)

விஜய்யின் லேட்டஸ்ட் கெட்டப்புக்கு இவர்தான் காரணம்…

விஜய்யின் லேட்டஸ்ட் கெட்டப்புக்கு காரணமான நபர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘தளபதி 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்துக்காக ஸ்டைலான கெட்டப்பில் தாடி, மீசையுடன் இளைஞனைப் போல மாறியுள்ளார் விஜய். இதற்கு காரணம், தேவ் என்ற ஸ்டைலிஷ்ட். இவர்தான் ‘மெர்சல்’ படத்திலும் விஜய்க்கு ஹேர் ஸ்டைலிஷ்ட்டாகப் பணியாற்றியவர். குறிப்பாக, வெற்றிமாறன் கேரக்டரில் நடித்த விஜய்யின் ஹேர் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.