செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (10:37 IST)

என் மகனுக்கு நான் காட்டப்போகும் முதல் படம் இது தான் - காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் மகனுக்கு முதன் முதலாக விஜய்யின் துப்பாக்கி படத்தை காட்டுவேன் என கூறியுள்ளார். 
 
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் இந்தி, தமிழ், தெலுங்கு  உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.  
 
இவர் கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் இருக்கிறார். 
 
இந்நிலையில் மகன் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், 'என் மகனுக்கு 8 வயது ஆகும் வரை எந்த ஒரு படத்தையும் காட்டப்போவதில்லை. 
 
8 வயது ஆன பிறகு அவன் பார்க்கப்போகும் முதல் படம் நான் நடித்த துப்பாக்கி படமாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.