செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (08:44 IST)

இலியானாவுக்கு இங்கு இடம் இல்லை - ரெட் கார்டு போட்ட கோலிவுட்?

ஒல்லி பெல்லி அழகியாக ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை இலியானா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
 
மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இலியானா தெலுங்கில் வெளியான தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
 
தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பெரிதாக தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
காரணம் அவர் தென்னிந்திய சினிமாவை அலட்சியமாக எண்ணிக்கொண்டு பாலிவுட் சினிமாவின் கவனம் செலுத்தியது தான். 
 
பின்னர் பாலிவுட்டில் அவர் காட்டிய கவர்ச்சியால் விஜய் நடித்த நண்பன் படத்தில் வாய்ப்பு கொடுத்தது கோலிவுட். 
 
அது ஹிட் ஆகியும் தென்னிந்திய சினிமாவை மதிக்காத இலியானா இன்னும் பாலிவுட்டில் தான் இருக்கிறார். ஆனால் அங்கு ஒன்னும் உச்சத்தை  தொடவில்லை. 
 
இந்நிலையில் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் இலியானாவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன்பணமும் கொடுத்திருக்கிறார். 
 
ஆனால், இலியானா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்து அடித்ததோடு வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. 
 
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் இலியானா மீது புகார் கொடுக்க தென்னிந்திய சினிமாவில் அவருக்கு இடம் கொடுக்கக்கூடாது என ரெட் கார்டு போட்டுள்ளனராம். எனினும் இது குறித்து இலியானா தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.