1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:19 IST)

‘கருப்பன்’ படத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்…

விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார் விநியோகஸ்தர்.



 
‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் ‘கருப்பன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். பக்கா கிராமத்துக் கதையான இதில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

படம் ரிலீஸானதைவிட, தற்போது 100 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார், படத்தை வாங்கி வெளியிட்ட அலெக்ஸாண்டர். தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து, கடந்த வாரத்தில் இருந்து எந்த புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. எனவே, அதற்கு முன்பு வெளியான படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

“அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ஃபேமிலி கதை என்பதால், அந்த ஆடியன்ஸ் நிறைய பேர் படத்தைப் பார்க்க வருகின்றனர்” என்கிறார் அலெக்ஸாண்டர்.