வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (16:35 IST)

மறுதணிக்கை செய்ய யாருக்கும் அதிகாரமில்லை : சீனுராமசாமி

இன்று காலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதன்  விளைவால் இப்படத்தின் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் இப்படத்தினை திரையிடுவதற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 
அரசின் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக எழுந்த சர்சைகளின் அடிப்படையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மற்றும் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் நேற்று இரவு மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் சர்காரில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள்  நீக்கப்பட்டு இன்று பிற்பகல் வேளையில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிரபல இயக்குநர் சீனுராமசாமி இவ்விவகாரம் குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
 
அவர் கூறியதாவது:
 
’தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பின்பு நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறு தணிக்கை செய்துதான் படத்தை வெளியிட வேண்டும்,இதுதான் நடைமுறை.
 
ஆகவே எவருக்கும் எந்த அமைப்புக்கும் காட்சிகளை நிக்கும் அதிகாரமில்லை.’ இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்