வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (15:38 IST)

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்ய வரும் 27 ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருக்கிறது. சினிமாவை சினிமாவாக பாருங்கள்! தணிக்கை சான்றுதல் இந்த சர்கார் படத்திற்கு கிடைத்த  பிறகு ஏன் தடை  விதிக்கிறீர்கள்..? என நீதிபதி விவேகானந்தன் அரசுத்தரப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் தனது வீட்டுக் கதவை தட்டியதாக இயக்குநர் முருகதாஸ் இன்று காலை தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டீருந்தார்.
 
முருகதாஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.பின் நீதிபதி அரசு தரப்பு வாதத்தை கேட்டறிந்தார்.
அதன்பின்பு நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து கூறியதாவது:
 
படத்தில் டிவி, மிக்ஸியுடன் கலர் டிவியும் சேர்த்து எரித்திருந்தால் உங்களுக்கு சம்மதமா...? என கேட்க ..,நீதிமன்றத்தில் அனவரும் சிரித்ததாகவும் தகவல் வெளியாகிறது.
அதிமுக அரசின் இலவச திட்டங்கள் இப்படத்தில் எரிக்கப்பட்டதால்தான்  இந்த அளவுக்கு பிரச்சனை தலைதூக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்தது.
 
மேலும் இப்படத்தில் கோமளவல்லி என்னும் கதாபாத்திரம் ஜெயலலிதாவைக் குறிப்பதாக பலரும் கூறிய நிலையில் தற்போது மறுதணிக்கை செய்யப்பட்டூள்ள சர்கார் படத்தில் வில்லியாக சித்தரிக்கப்பட்டுள்ள வரலட்சுமி பேசும் போது சப்தம் இல்லாமல் மூட் (mude) செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
எனவெ தன்னை கைது செய்ய வாய்பிருப்பதால் அதற்காக முன் ஜாமீன் கோரியிருந்தார் முருகதாஸ். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியில் வரும் 27 ஆம் தேதி முருகதாஸ் முன் ஜாமீன் மீதான விசாரணையை ஒத்திவைப்பதாகவும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது எனவும்  நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.