திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (18:21 IST)

இந்த உலகத்தில் மையம் என்றே ஒன்று இல்லை: வெற்றிமாறன் பேச்சு

உலகம் இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது என்றும், நீங்கள் இதில் இடது அல்லது வலதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், மையம் என் ஒன்று இல்லை என்றும், நீங்கள் மையத்தில் உள்ளதாக கூறிக்கொண்டால் அது வலதுதான் என்றும், கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
 
இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் மேலும் கூறியபோது, ‘இன்றைய உலகம் பிளவுபடுத்தப்பட்டு உள்ளது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையாது. 
 
மய்யம் என்று சொல்பவரும் வலதுசாரிதான். ஆனால் அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உலகில் நடப்பதைதான் நாம் திரைப்படங்களில் காட்ட முடியும். ஒருவேளை இந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்கள் வரலாம்’ என கூறினார்.