ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:44 IST)

தரம் தாழ்த்திப் பேசுறது நியாயம் இல்லை: பொங்கிய ரவிமரியா

புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கியுள்ள , 'அகவன்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.



இந்த விழாவில்   ரவி மரியா பாக்யராஜ், யுகபாரதி, லாரன்ஸ், சின்னி ஜெயந்த், எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன்,மதுரை அன்புச்செழியன், பிக்பாஸ் பரணி,  உள்பட பலர் கலந்துகொண்டனர். 
 
இந்த விழாவில் பேசிய இயக்குனர் ரவிமரியா, ஒரு இயக்குநர், 'பேரன்பு' ஆடியோ லான்ச்ல மம்மூட்டியை பாராட்டினாரு. அண்டை மாநில பெரிய நடிகரைப் பாராட்டலாம். அதுக்கு நம்ம ஊர் நடிகர்களைத் தரம் தாழ்த்திப் பேசுறது நியாயம் இல்லை. நம் குடும்பத்தில் இருப்பவர்களைத் தரம் தாழ்த்திப் பேசியது தவறு. அன்று பேசிய அந்த இயக்குநரின் படத்தில் நடித்த நாயகர்கள் அனைவருமே இங்க இருந்தவங்கதான். அதை மறந்துட்டு பேசுறார். தமிழ் கலாசாரத்துல இல்லாத ஒரு குணாதிசயத்தை நடிப்பு என்று சொல்றாங்க. அதை அவங்களுக்குள்ள பேசிக்கலாம். இப்படி நம்ம நடிகர்களைப் பத்தி பேசக்கூடாது என்றார்.