வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (19:28 IST)

என்.ஜி.கே. டீசரை கொண்டாட காத்திருக்கும் ஐந்து மாநிலங்கள்

சூர்யா நடித்து முடித்துள்ள 'என்.ஜி.கே. படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை பெரும்பாலான திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு மற்றும் மதுரை உள்பட ஒருசில நகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள திரையரங்குக்களிலும் 'என்.ஜி.கே. டீசரை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தயாரிப்பு தரப்பு மிகுந்த உற்சாகத்துடன் இந்த படத்தின் பணிகளை கவனித்து வருகிறது.
 
 சூர்யா , சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் சிங் , பாலா சிங்க் , மன்சூர் அலிகான் , முரளி சர்மா, சம்பத் ராஜ் , சரத் குமார் , ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது.