வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (22:53 IST)

தியேட்டர் வேலைநிறுத்தம் வாபஸ்! ஆனாலும் என்ன பிரயோஜனம்?

சென்னை தவிர தமிழகம் முழுவதும் மார்ச் 16ஆம் தேதியில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. ஆனாலும் தற்போதைய டெக்னாலஜியின் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இணையதளங்கள் தேவையான திரைப்படங்களை பார்க்க உதவுகின்றன. மேலும் புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர் மூடல் என்பது மக்களுக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை

இந்த நிலையில் இன்று மாலை தமிழக அரசு அதிகாரிகளுடன் திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்  வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து  திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இன்று மாலை திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்' என்று கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்பதில் பிடிவாதமாக இருப்பதால் தியேட்டர் நாளை முதல் திறந்தாலும் 10% பார்வையாளர்கள் கூட வரமாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.