வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (12:39 IST)

“வேலை நிறுத்தம் தொடரும்” – திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

முதல்வரை சந்தித்த பின்னும் ‘வேலை நிறுத்தம் தொடரும்’ என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை லைசென்ஸைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி மூன்று வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், “இன்னும் இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர். பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால் இரண்டு நாட்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். எனவே, வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.