தமிழ்நாடு தியேட்டர் அதிபர்களின் புது முடிவு: கமல்-விஷால் அதிர்ச்சி
தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் திடீரென ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இதற்கு கமல், விஷால் உள்பட முக்கிய நடிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகிஸ்தர்களும் வரும் வசூலை பிரித்து கொள்வதில் தற்போது தியேட்டர் அதிபர்கள் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதன்படி முதல் வார வசூலில் ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் 60%ம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55%ம், மற்ற நடிகர்கள் படம் என்றால் 50%ம் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஏ சென்டருக்கு மட்டுமே என்றும் இதுவே பி,சி சென்டருக்கு இதில் இருந்து 5% அதிகமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர்களுக்கு அனைத்து சென்டருக்கு 50% வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாவது வார வசூலில் முதல் வாரம் தரும் சதவிகிதத்தில் இருந்து 5% குறைவாக விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பட்டியலில் கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் இல்லை. முன்னணி நடிகர்களாகும், நல்ல வசூலை கொடுக்கும் படங்களை தொடர்ந்து அளித்து வரும் இந்த நடிகர்கள் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விரைவில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தில் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது