வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (20:17 IST)

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது! இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சதவீதம் என்ன?

தமிழகத்தில் இன்று வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் அவ்வப்போது பதிவான வாக்கு சதவிகிதங்களை தெரிவித்து வந்தது. மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது
 
இந்த நிலையில் மதுரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும்,  சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
மேலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகபட்சமாக அரூரில் 86.96%, குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக நாமக்கலில் 78% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.