திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (15:26 IST)

இந்திய சூப்பர் ஸ்டாரை பெருமிதப்படுத்திய ஐக்கிய அமீரகம்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் பாலிவுட் கிங் கான் , பாட்சா என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.

இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அவரது 55 வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடினார். அவரை கௌரவிக்கும் வகையில் நேற்று ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகில் மிக உயர்ந்த கட்டிடமான புஜ் கலீஃபாவில் உள்ள பெரியதிரையில்  அவரது புகைப்படமும், ஒளிபரப்பானது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான், எனது புகைப்படத்தை பெரிய திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அடுத்த படத்திற்கு முன்பாக எனது நண்பர் முஹமது அல்லாபர் மிகப்பெரிய திரையில் என்னைக் காண்பித்துள்ளார்.அனைவருக்கும் நன்றி! எனது குழந்தைகளும் இதுகுறித்து மகிழ்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.