திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (16:00 IST)

ஆன்லைனில் ஷாருக் பிறந்தநாள் கொண்டாட்டம் – ரசிகர்கள் புது முயற்சி!

நாளை நடிகர் ஷாருக் கானின் 55 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

பாலிவுட்டின் பாட்ஷா , கிங் கான் என பலவாறு புகழப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் சினிமாவில் இருந்து ஒரு சிறு ஓய்வில் இருக்கிறார். ஆனாலும் ரசிகர்களுக்கு அவர் மீதான கவர்ச்சி இன்னும் குறையவில்லை. இந்நிலையில் நாளை ஷாருக் கானின் 55 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக ஷாருக் வீட்டு முன் கூடி இருக்கும் ரசிகர்களை வீட்டில் இருந்து அவர் சந்திப்பார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் ஆன்லைன் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வில் ஷாருக்கை ஆன்லைன் மூலமாக சந்திப்பது, ரசிகர்களுக்கான கேள்வி பதில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றை நடத்த உள்ளனர்.