1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (11:17 IST)

சூர்யா கையில் இருக்கும் மர்ம எண்? நாளை கங்குவா செகண்ட் லுக்! – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Kanguva
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் செகண்ட் லுக் நாளை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.



தமிழில் சிறுத்தை, அண்ணாத்த, வீரம் உள்ளிட்ட பல படங்களை அளித்தவர் இயக்குனர் சிவா. இவரது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைக்கிறார்.

தம்பி கார்த்திக்கு ‘சிறுத்தை’ மூலம் சினிமாவில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர் சிவா, நடிகர் சூர்யாவுக்கும் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ முதன்முதலாக வெளியிடப்பட்டபோதே அது அரச கால கதை போல அமைக்கப்பட்டிருந்தது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கங்குவா படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

நாளை மாட்டுப் பொங்கல் என்பதாலும், படம் அரச காலத்தை மையப்படுத்தியது என்பதாலும் போஸ்டர் ஏறு தழுவுதலை மையப்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு போஸ்டரில் ஒரு கை இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. டாட்டூ குத்தப்பட்ட அந்த கையில் 15397 என்ற எண்கள் பச்சையாக குத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு என்ன அர்த்தம் என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

Edit by Prasanth.K