1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (22:45 IST)

டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' படம் - முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் 5 ஆம் தேதி ரிஸீஸான படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் ரிலீஸாகி  பெரும் சர்ச்சையை சந்தித்தது.
 
கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
 
இருப்பினும் இப்படம் பல சர்ச்சைகள் தடைகளை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
 
இந்த நிலையில், டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்  நாளை இரவு 8 மணிக்கு திரையிர உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு கேரளம் முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
அதில், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக  அரசு தொலைக்காட்சி மாறக்கூடாது என்றும்,பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடும் முடிவை திரும்ப பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.